
வடதமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு வரும் நவம்பர் 11, 12 ஆகிய தேதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்தாண்டு மழைப் பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகம், புதுச்சேரி மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் நவம்பர் 11,12 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் ,திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜாபர் சேட் மனைவி, ராஜமாணிக்கம் மகன் சொத்துகள் முடக்கம்
நவம்பர் 12 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளுக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.