கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால் ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொல்லிமலை ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

நாமக்கல்: கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால் ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை. இங்கு விடுமுறை நாட்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

சுமார் 300 அடி உயரத்திலிருந்து வெள்ளியை உருக்கி விட்டதுபோல் விழும் ஆகாய கங்கை அருவியைக் காணவும் குளிக்கவும் இளைஞர்கள், சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்வர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவி பகுதிக்குச் செல்ல நபர் ஒருவருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஆகாய கங்கை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், வனத்துறையினர் தடை விதிப்பதும் வழக்கமாக உள்ளது.

இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் மழையால் அங்குள்ள ஆகாய கங்கை அருவியில் சனிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவி பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் விடுமுறையையொட்டி கொல்லிமலை வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com