வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :13 நவம்பர் 2022, 2:14 pm

DIN

மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏரிகள் நிரம்பி உள்ளதால் சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் வெளியேற முடியாமல் அங்காங்கே தேங்கி நிற்கிறது.

இந்த நிலையில் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் லலிதா தெரிவித்துள்ளார்.

கனமழையால் பள்ளி, கல்லூரிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி நடந்து வருவதால் இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.