தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை யொட்டி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் மேலும் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது, மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வட தமிழகம், தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் எனவும் கூறியுள்ளது.
இதையொட்டி நவம்பர் 21, 22 தேதிகளில் தமிழகத்தில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நடைப்பயணத்தின் இடையே இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்திய ராகுல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை?
தினப்பலன்கள் - சிம்மம்
தினப்பலன்கள் - கன்னி

பிஞ்சுக் கைவண்ணம்
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

