ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

டிச. 1ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :23 நவம்பர் 2022, 7:11 am

DIN

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வருகிற டிசம்பர் 1 ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் மாவட்டச் செயலாளா்கள் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

முன்னதாக, திமுகவில் புதிய நிர்வாகிகள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக இளைஞரணிச் செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இளைஞரணி துணைச் செயலாளர்களாக 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மகளிரணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிரணிச் செயலாளராக ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.