கருணாநிதிக்கு சிலை! சேலம் மாநகராட்சி முடிவு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முழு உருவ வெண்கல சிலை வைப்பதற்கு சேலம் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருணாநிதிக்கு சிலை! சேலம் மாநகராட்சி முடிவு


சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் முழு உருவ வெண்கல சிலை வைப்பதற்கு சேலம் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கருணாநிதிக்கு சிலை வைப்பதில் மாநகராட்சி பெருமை கொள்வதாக மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார். 

சேலம் மாநகராட்சி இயல்பு மற்றும் அவசர கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியதும் சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் கூறும் போது, தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்து தமிழகத்தை தலை நிமிர செய்தது மட்டுமல்லாமல்,  தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு சாதனைகளை கருணாநிதி செய்த சாதனைகளை சுட்டிக்காட்டிய மேயர், கருணாநிதிக்கு சேலம் அண்ணா பூங்காவில் முழு உருவ வெண்கல சிலை அமைத்திட தீர்மானம் நிறைவேற்றுவதாகவும், கருணாநிதிக்கு சிலை வைப்பதில் மாநகராட்சி பெருமை கொள்வதாகவும் பேசினார். 

சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற சேலம் மாநகராட்சி இயல்பு மற்றும் அவசர கூட்டத்தில் பங்கேற்ற மாமன்ற உறுப்பினர்கள்.

மாநகர மேயர் அறிவித்த தீர்மானத்திற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் வரவேற்று பேசினர்.

தொடர்ந்து நடைபெற்ற இந்த கூட்டத்தில், சேலம் மாநகர மக்களுக்கு சீரான குடிநீர் விநியோக்கிப்பதற்காக அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழு மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை குழுவின் தலைவர் கலையமுதன் மாநகர மேயரிடம் வழங்கினர்.

இந்த அறிக்கையில் கடந்த பத்து ஆண்டுகளாக மாநகர பகுதியில் அனுமதி இல்லாமல் ஹோட்டல்கள், விடுதிகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் கொடுக்கப்பட்டு உள்ள இணைப்புகளை துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, ரூ.80 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொண்டால், மாநகர மக்களுக்கு தடை இல்லாத குடிநீர் விநியோகம் செய்திட முடியும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com