கூத்தாநல்லூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 15 ஆவது மாவட்ட பேரவை!

 திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15 ஆவது மாவட்டப் பேரவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 15 ஆவது மாவட்ட பேரவை!
Published on
Updated on
1 min read

கூத்தாநல்லூர்:  திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15 ஆவது மாவட்டப் பேரவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியார் மண்டபம், விஜயா நினைவரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் வெ.சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் வி.தெட்சிணாமூர்த்தி வரவேற்றார். அரங்கத்தின் வாயிலில் கொடியேற்றப்பட்டு, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து பேசினார். 

மாவட்டப் பொருளாளர் எஸ்.செங்குட்டுவன் வரவு, செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள் நிரந்தரப் பணியிடங்களை அழித்திடும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

அகவிலைப்படி சரண் விடுப்பு தொகையை உடனே வழங்கிட வேண்டும். காலை சிற்றுண்டி வழங்குவதை சத்துணவு ஊழியர்களை கொண்டு அமுல்படுத்த வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை ரத்து செய்து, பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். வலங்கைமான் பேரூராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். ஊராட்சி செயலாளர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். 

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அலுவலக வேலையாக வரும் பொதுமக்களுக்கு, வெளிப்புறத்தில் அமர்வதற்கு இருக்கை, குடிநீர், கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால், டெல்டா பகுதிக்கு வேளாண் கல்லூரியை அமைக்க வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இக்கூட்டத்தில், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் டி.தமிழ்சுடர், மாநிலத் தலைவர் மு.அன்பரசு, துணைத் தலைவர் ஆ.பெரியசாமி, மாவட்ட இணைச் செயலாளர் கே.பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் உ.சண்முகம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். நிறைவாக, மாவட்ட துணைச் செயலாளர் டி. இராஜசேகரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com