திருச்சி: அரசுப் பள்ளியில் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!

அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான வானவில் மன்றத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
பள்ளி மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ்’ (வானவில் மன்றம்) என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ்’ (வானவில் மன்றம்) என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருச்சி: திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல  மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பள்ளி மாணவ,மாணவிகளுக்காக  வானவில் மன்றம் என்ற புதிய திட்டத்தை (எங்கும் அறிவியல்-யாவும் கணிதம்) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திருச்சி, பெரம்பரலூர், அரியலூர் ஆகிய 3 மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள், செவ்வாய்க்கிழமை (நவ.28,29) இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். 

இதற்காக திங்கள்கிழமை காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து தனிவிமானம் மூலம் காலை 9 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக திருச்சியை அடுத்த காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் நல பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வந்தார். அங்கு பள்ளி மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான ‘ஸ்டெம் ஆன் வீல்ஸ்’ (வானவில் மன்றம்) என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் நடமாடும் அறிவியல், கணித ஆய்வகத்தினையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார். 

இதையடுத்து 38 மாவட்டங்களில் 13,210 அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வானவில் மன்றம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 25 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவார்கள். 

இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  

முதற்கட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ள 150 இருசக்கர மோட்டார் வாகனம், நடமாடும் அறிவியல் ஆய்வகம்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்: பின்னர், திருச்சி பாப்பாக்குறிச்சி அரசுப் பள்ளியில் வகுப்பறைக்கு சென்று மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார். பின்னர், பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். 

முதற்கட்டமாக 150 இருசக்கர மோட்டார் வாகனம், நடமாடும் அறிவியல் ஆய்வகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  

நடமாடும் ஆய்வக தன்னார்வலர்கள் 20 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஆய்வக பயிற்சி வழங்கப்பட்டு உள்ளனர்.

மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களையும் கொடியசைத்து வழி அனுப்பி வைத்த முதல்வர் ஸ்டாலின். 

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளிடையே அறிவியல் மற்றும் கணித கருத்துகள் குறித்த சிந்திக்கும் திறமையுடன் கூடிய ஆர்வத்தை வளர்த்தெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்திற்கு ஸ்டெம் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது.

அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் கணிதம் ஆகிய நான்கு பாடங்களில் முதல் எழுத்தை இணைத்து ஸ்டெம் என உருவகப்படுத்தி உள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் முதல் முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும் திருச்சியில் இருந்து  சாலை மார்க்கமாக பெரம்பலூருக்கு புறப்பட்டு சென்றார் முதல்வர்.

இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக பள்ளி கல்வித்துறை செயலர் காகர்லா  உஷா, ஆணையாளர் நந்தகுமார், 
மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் மற்றும் எம்பி-க்கள் எம்எல்ஏக்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முதல்வர் வருகையொட்டி 3 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com