
கோப்புப்படம்
அடுத்த 3 மணி நேரத்தில் (பகல் 1 மணி வரை) 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நீலகிரி, கோவை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.