திமுக துணைப்பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி நியமனம்!

திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி புதிதாக நியமனம் செய்து அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 
திமுக துணைப்பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி நியமனம்!


திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி புதிதாக நியமனம் செய்து அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

மாநாடு போன்ற பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜாா்ஜ் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை திமுக 15 ஆவது பொதுக்குழு தேர்தல் கூட்டம் தொடங்கியது.  கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. 

பொதுக்குழுவில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்று  உள்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து திமுக துணைப் பொதுச் செயலாளராக கனிமொழி எம்.பி புதிதாக நியமனம் செய்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜிநாமா செய்ததை தொடர்ந்து திமுக துணை பொதுச் செயலாளர் பதவிக்கு கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார். 

பொதுக்குழு தேர்தலில், கழக துணைப் பொதுச் செயலாளராக ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராஜா எம்.பி., அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஆகியோர் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

திமுகவில் முக்கியமான தலைவராக கனிமொழி இருந்து வந்தாலும் கூட அவருக்கு மகளிரணி செயலாளர் பொறுப்பை தாண்டிய பெரிய பொறுப்பு வழங்க வேண்டும் என்பது பலரின் கோரிக்கை இருந்து வந்த நிலையில், கட்சி நிர்வாகம், அனுபவம் என பல கோணங்களின் பார்வையில் இன்று திமுக துணை பொதுச் செயலாளராக கனிமொழி நியமனம் செய்யப்பட்டிருப்பது முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் கனிமொழி துணை பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதும் பொதுக் குழு கூட்டத்தில் இருந்தவர்கள் வாழ்க என கூறி கோஷம் எழுப்பினர்

பின்னர், மோடையில் முன்வரிசையில் அமர்ந்திருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் செல்வியின் கணவர் காலில் விழுந்து வணங்கினார் கனிமொழி. கனிமொழி தலையில் கை வைத்து அவர் வாழ்த்தும் ஆசியும் வழங்கினார்.

பின்னர் மேடை ஏறிய கனிமொழி, அங்கு அமர்ந்திருந்த தஸலைவர்களிடம் வணக்கம் தெரிவித்தவர் துரைமுருகன் காலை தொட்டு வணங்கினார். பின்னர் அண்ணனும், முதல்வருமான ஸ்டாலின் காலை தொட்டு வணங்க கனிமொழி முயன்றபோது அதெல்லாம் வேண்டாம் என அன்புடன் கை காட்டிய ஸ்டாலின், அங்கே இருக்கும் படங்களுக்கு மாலை போடுங்கள் என சைகை காட்டினார். இதையடுத்து அங்கிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி படங்களுக்கு கணிமொழி மாலை போட்டு மரியாதை செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com