டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு!

திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :9 அக்டோபர் 2022, 11:25 am IST


திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வேறு யாரும் போட்டியிடாததால் திமுக தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மாநாடு போன்ற பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள புனித ஜாா்ஜ் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை திமுக பொதுக் குழுக் கூட்டம் தொடங்கியது.  கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. 

பொதுக்குழுவில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார் என்று  உள்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார். 

அதேபோன்று, பொதுச் செயலாளராக அமைச்சா் துரைமுருகன், பொருளாளராக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு ஆகியோரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனர். 

திமுக தணிக்கைக்குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளராக ஐ. பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.