
கோப்புப் படம்
தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அடுத்த இரு வாரங்களுக்குள் தொடங்கும் சூழல் நிலவுகிறது. அதனையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு முதல் அவ்வபோது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விடுமுறை அறிவித்துள்ளார்.