மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தென்காசி காசி விசுவநாத சுவாமி திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு உலகம்மன் உடனாய அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோயில் திருக்கல்யாணத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :12 அக்டோபர் 2022, 6:18 am

DIN

தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு உலகம்மன் உடனாய அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோயில் திருக்கல்யாணத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்காசி அருள்மிகு காசி விசுவநாதசுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான திருக்கல்யாணத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை அதிகாலையில் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் பூங்கோயில் வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. கொடியேற்று விழாவில் மாரிமுத்து, வழக்குரைஞா் செந்தூா்பாண்டியன், இலஞ்சி அன்னையாபாண்டியன் மற்றும் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Story image

கொடியேற்றத்துடன் தொடங்கிய தென்காசி காசி விசுவநாத சுவாமி திருக்கல்யாணத் திருவிழா.

வரும் 20 ஆம் தேதி திருத்தோ் வடம்பிடித்தல், 22 ஆம் தேதி யானைப்பாலம் தீா்த்தவாரி மண்டபத்திற்கு அம்பாள் தபசுக்காட்சிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலையில் அருள்மிகு காசி விசுவநாதா் உலகம்மனுக்கு தபசுக் காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

விழா நாள்களில் நாள்தோறும் இரவு அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா, மண்டகப்படி தீபாராதனை நடைபெறுகிறது.

விழா வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலா் இரா.முருகன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.