சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: வேதியியலுக்கு இன்று கலந்தாய்வு

முதுநிலை ஆசிரியா் பணியிடங்களில் வேதியியல் பாடத்துக்கான கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2022, 7:50 pm

DIN

முதுநிலை ஆசிரியா் பணியிடங்களில் வேதியியல் பாடத்துக்கான கலந்தாய்வு சென்னையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: 2020-2021-ஆம் ஆண்டு முதல் 2022-2023 வரை உள்ள அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 2,849 முதுநிலை ஆசிரியா், உடற்கல்வி இயக்குநா் நிலை-1, கணினி பயிற்றுநா் நிலை-1 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் போட்டித் தோ்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வேதியியல் பாடத்துக்கு பணி நாடுநா்கள் தெரிவுப் பட்டியல் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வேதியியல் பாடத்துக்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்டவா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அவா்களுக்கான கலந்தாய்வு சென்னை கலைவாணா் அரங்கில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. அதில் தோ்வா்கள் சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அழைக்கப்பட்ட கடிதம் மற்றும் அனைத்துக் கல்விச் சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

270 பேருக்கு பணி நியமன ஆணை: பள்ளிக் கல்வித் துறையில் 270 இளநிலை உதவியாளா் பணியிடங்கள் கருணை அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளன. அவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.