தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் தீபாவளி சிறப்புப் பேருந்துகள் குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது தீபாவளி சிறப்பு ரயிகள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, தாம்பரத்திலிருந்து அக்டோபர் 20ஆம் தேதி திருநெல்வேலிக்கும், மறு மார்கத்தில் அக்டோபர் 21ஆம் தேதி தாம்பரத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதேபோன்று, அக்டோபர் 22ஆம் தேதி செகந்திராபாதிலிருந்து சென்னை வழியாக தஞ்சைக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.