
சட்டப்பேரவை வளாகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்திக்க உள்ளனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர் செல்வத்துக்கு பதிலாக உதயகுமாரை நியமிக்க கோரியதை அங்கீகரிக்க வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர அனுமதிக்கக் கூடாது என கோரிக்கை விடுக்க உள்ளனர்.
இதையும் படிக்க: குடியாத்தம் கௌண்டன்யா ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
எடப்பாடி பழனிசாமி தரப்பில் 62 எம்.எல்.ஏ.க்களும், பன்னீர் செல்வம் தரப்பில் 4 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.