
எடப்பாடி கே.பழனிசாமி கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட ஆத்தூர் நகர அதிமுகவினர்
சேலம் மாவட்டம் ஆத்தூரில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமையில் அதிமுகவினர் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கைதை கண்டித்து ஆத்தூர் நகர அதிமுகவினர் ஊர்வலமாக பேருந்துநிலையம் வரை கோஷமிட்டுக் கொண்டே மறியலில் ஈடுபட்டனர். இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.மாதேஸ்வரன் ஆர்.எம்.சின்னதம்பி நகர செயலாளர்கள் அ.மோகன் எஸ்.மணிவண்ணன் தலைவாசல் ஒன்றியக்குழுத் தலைவர் க.ராமசாமி பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் சின்னதம்பி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | திருப்பூர் துணை ஆட்சியராக நடிகர் சின்னிஜெயந்த் மகன் பொறுப்பேற்பு!
ஆத்தூர் நகர காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்துள்ளார்.