தூத்துக்குடியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்: 80 பேர் கைது 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.  
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கைதை கண்டித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கைதை கண்டித்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.  

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கைதை கண்டித்து, தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 

இப் போராட்டத்திற்கு மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்தார்.  கட்சி அலுவலகத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை ஊர்வலம் ஆக வந்த அதிமுகவினர், பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து உரிய அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக 10 பெண்கள் உள்பட 80 பேரை போலீஸார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com