தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கைது!

காவல்துறை தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரையும் போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். 
தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கைது!


சென்னை வள்ளூவர்கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காவல்துறை தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரையும் போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். 
  
சட்டப் பேரவையில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்தப் போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும். 

இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டதுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அமைப்பு ரீதியான சென்னை மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் புதன்கிழமை (அக்.19) உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படலாம் என்ற சந்தேகத்தின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான காவல்துறையினர் வள்ளுவர் கோட்டம் முன்பு குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வள்ளூவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் பழனிசாமி, ஆதரவு எம்எல்ஏக்கள், அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். 

அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டபோதும் கலைந்து செல்லாததால் அவர்களை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு கொண்டுச் சென்றனர்.

தடையை மீறி தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட பழனிசாமி உள்ளிட்டோரை கைது செய்யும்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com