ஸ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே சத்தியம் கிராண்ட் ரிசர்ட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியிலிருந்து விஷவாயு தாக்கியதில் 3 பேர் பலியாகினர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பலி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் தனியார் நட்சத்திர உணவு விடுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 3 பேர் விஷவாயு தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

ஸ்ரீபெரும்புதூரில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் தனியார் நட்சத்திர உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த உணவு விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு கீழாண்டை தெருவை சேர்ந்த ரங்கநாதன்(51), நவீன்குமார்(30), திருமலை(18) ஆகியோர் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்த போது கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விழவாயு தாக்கி ரங்கநாதன், நவீன்குமார், திருமலை ஆகியோர் மயக்கம் அடைந்து கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து கழிவுநீரில் மூழ்கி பலியாயினர். 

இதுகுறித்து உணவு விடுதி நிர்வாகத்தினர் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கழிவுநீர் தொட்டியில் இருந்து கழிவுநீரை அகற்றிவிட்டு சுமார் 1 மணி நேர முயற்ச்சிக்கு பின் ரங்கநாதன், நவீன்குமார், திருமலை ஆகியோரது சடலங்களை மீட்டனர். 

இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் மூவரின் சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து உணவு விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து உணவு விடுதியின்  மேலாளர் சுரேஷ்குமார்,  ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

விஷவாயு தாக்கி ஒரே பகுதியைச் சேர்ந்த  3 பேர் பலியான சம்பவம் கச்சிப்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com