
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகள் நிரம்பி வழிகின்றன.
இந்நிலையில், கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(வெள்ளிக்கிழமை) ஒருநாள் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி அறிவித்துள்ளார்.
அதுபோல மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.