இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மனநல காப்பகத்தில் மலர்ந்த காதல் ஜோடி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திருமணம்!

காதல் வசப்பட்டு கரம்கோத்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகவாசிகளான மகேந்திரன்-தீபா திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:40 am

DIN

காதல் வசப்பட்டு கரம்கோத்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகவாசிகளான மகேந்திரன்-தீபா திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். பொதுவாகவே, அங்கு பல்வேறு வகையான மன நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவா்களில் பெரும்பாலானோா் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனா். உறவினா்களால் கைவிடப்பட்ட சிலா் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், அவ்வாறு மனநல காப்பகத்தில் தங்கி தொழில்பயிற்சி மேற்கொண்டு வரும் சென்னையை சோ்ந்தவா் மகேந்திரன் (42). வேலூரைச் சோ்ந்தவா் தீபா (36) இருவா் காதல்வசப்பட்டு இல்லற வாழ்வில் இணையராக கரம்கோர்க்க முடிவு செய்தனர்.  

Story image

காதல் வசப்பட்டு கரம்கோத்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகவாசிகளான மகேந்திரன்-தீபா

காப்பக நிா்வாகம் சார்பில் இவர்களின் திருமணத்தை வெள்ளிக்கிழமை நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மகேந்திரன்-தீபா காதல் ஜோடிகள் திருமணம் கீழ்ப்பாக்கம் மனநல காப்பக நுழைவாயில் எதிரே உள்ள, சித்தி புத்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடந்தது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாலி எடுத்து கொடுக்க, கெட்டிமேளம் கொட்ட மகேந்திரன், தீபாவுக்கு தாலி கட்டினார். 

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் வாழ்வில் இணையராக கரம்கோர்த்த மகேந்திரன்-தீபாவை வாழ்த்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.