காவிரி ஆற்றில் வெள்ள அபாய ஒத்திகைப்பயிற்சி 

காவேரிப்பட்டி அக்ரஹார ஊராட்சியில் உள்ள காவிரி ஆற்றில் வருவாய்த்துறையின் சார்பில் வெள்ள அபாய ஒத்திக்கைப்பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த காவேரிப்பட்டி அக்ரஹாரத்தில் உள்ள காவிரி ஆற்றின் வெள்ளத்தில் வியாழக்கிழமை சிக்கிக் கொண்ட கன்றுக்குட்டியினை கரைக்கு அழைத்து மீட்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ள சங்ககிரி தீயணை
சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த காவேரிப்பட்டி அக்ரஹாரத்தில் உள்ள காவிரி ஆற்றின் வெள்ளத்தில் வியாழக்கிழமை சிக்கிக் கொண்ட கன்றுக்குட்டியினை கரைக்கு அழைத்து மீட்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ள சங்ககிரி தீயணை

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த காவேரிப்பட்டி அக்ரஹார ஊராட்சியில் உள்ள காவிரி ஆற்றில் வருவாய்த்துறையின் சார்பில் வெள்ள அபாய ஒத்திக்கைப்பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 

சேலம் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர்  தமிழரசி இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சங்ககிரி வட்டாட்சியர் எஸ்.பானுமதி முன்னிலை வகித்தார். 

சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் டி.அருள்மணி தலைமையிலான வீரர்கள் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் பொழுது தண்ணீரில் சிக்கிக் கொண்ட மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட  பல்வேறு உயிரினங்கள், பொருள்களை எவ்வாறு பத்திரமாக மீட்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர். 

இதையும் படிக்க.. மீண்டும் மலர்கிறதா அனார்கலி - சலீம் காதல் கதை?

தண்ணீரில் சிக்கிக் கொண்டவர்களை முதலில் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் மீட்கப்பட்டவருக்கு முதலுதவி அளித்தப்பின் மருத்துவதுறைக்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட நபரை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

காவிரி ஆற்றின் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஆட்டு குட்டி மீட்கப்பட்டு அக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவர்கள்.
காவிரி ஆற்றின் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஆட்டு குட்டி மீட்கப்பட்டு அக்குட்டிக்கு சிகிச்சை அளிக்கும் கால்நடை மருத்துவர்கள்.

மருத்துவமனையில் மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்து சிகிச்சை அளித்தனர். இதே போல் கால்நடைகளை வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு அப்பகுதியில் அரசு கால்நடைமருத்துவர்களுக்கு தகவல் அளித்து வரவழைக்கப்பட்டு கால்நடைகளுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மாடி வீடுகளில் சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு மீட்டு சிகிச்சை அளிப்பது என்பது குறித்தும் விளக்கிக் கூறினர். மேலும் அவசர காலத்தில் உரிய அலுவலர்களுக்கு எவ்வாறு  தகவல் தெரிவிப்பது எவ்விதமான உதவிகள், கருவிகள் தேவைப்படுகின்றன என்ற விவரங்களை தகவல் அளிப்பவர் பதற்றப்படாமல் தெரிவிப்பது குறித்து தீயணைப்பு நிலைய அலுவலர் விளக்கிக் கூறினார். 

மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், தேர்தல் துணை வட்டாட்சியர் சிவராஜ், சமூகநலத்துறை தனி வட்டாட்சியர் ராஜேந்திரன், காவேரிப்பட்டி அக்ரஹார ஊராட்சி மன்றத்தலைவி சாந்திபரமசிவம், மருத்துவர் அமுதராணி தலைமையிலான குழுவினர், காவல் ஆய்வாளர் ஆர்.தேவி, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், ஊர்பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com