
அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் பதவியேற்றுக் கொண்ட அறங்காவலர்கள்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் புதிய அறங்காவலர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய அறங்காவலர்கள் தேர்வு வியாழக்கிழமை காலை திருக்கோயில் இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில், இணை ஆணையர் (கூ.பொ) ம. அன்புமணி முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக செந்தில்முருகன், அனிதா குமரன், ராமதாஸ், அருள்முருகன், கணேசன் ஆகிய ஐந்து பேர் பதவியேற்று கொண்டனர்.
இதையும் படிக்க | கொலம்பியா முதல்வர் பதவிக்கு போட்டியிடும் அஞ்சலி: யார் இந்த அஞ்சலி?
இதனைத் தொடர்ந்து அறங்காவலர் குழு தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் உறுப்பினர்கள் ஈடுபட்டனர். தூத்துக்குடி உதவியாளர் தி.சங்கர் முன்னிலையில் நடைபெற்ற தேர்வில் அறங்காவலர் குழு தலைவராக ரா. அருள்முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் தலைவர் பதவியேற்றுக்கொண்டார்.
கூடுதல் ஆணையர் கண்ணன், உள்ளிட்ட அறநிலையத்துறையினர், திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் சால்வே அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.