எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

News image
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது
Updated On :7 செப்டம்பர் 2022, 3:40 am

DIN

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து நடை பயணத்தை புதன்கிழமை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகம் வந்திருக்கும் ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கன்னியாகுமரி செல்ல திட்டமிட்டு இருந்தார். 

கோவையிலிருந்து ரயில் மூலமாக புறப்பட்ட அர்ஜுன் சம்பத்தை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் நள்ளிரவு கைது செய்தனர்.

அவரை திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அவரது உதவியாளர்கள்  அரிகரன்,  பொன்னுசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.