பாஜக மீது ராகுல் காந்தி சரமாரி குற்றச்சாட்டு: ஒற்றுமைப் பயண உரை

நாட்டின் பொருளாதாரத்தை குறிப்பிட்ட தொழிலதிபர்கள் மட்டும் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், ஏழை மக்களிடமிருந்து பாஜக திருடுவதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாட்டின் பொருளாதாரத்தை குறிப்பிட்ட தொழிலதிபர்கள் மட்டும் கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், ஏழை மக்களிடமிருந்து பாஜக திருடுவதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

இந்தியாவை ஒருங்கிணைப்போம் என்ற முழக்கத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ஒற்றுமைப் பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மாலை தொடக்கி வைத்தார். நடைபயணத்தைத் தொடக்கி வைக்கும்பொருட்டு தேசியக் கொடியை ராகுல் காந்தியிடம் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நடைபயணமாகச் சென்றனர். 

அங்கு பொதுக்கூட்ட மேடையில் ராகுல் காந்தி பேசியதாவது,  ஒவ்வொரு இந்தியரின் அடையாளமாகவும் தேசியக் கொடி உள்ளது. ஒவ்வொரு குடிமக்களுக்கான உரிமையையும் தேசியக் கொடி பாதுகாக்கிறது. தனிநபர்களின் உரிமையை, கலாசாரத்தை, பண்பாட்டை பாதுகாக்கிறது.

ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகிறது

தற்போது அந்த கொடி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இந்தியா என்கிற தத்துவம் கொடியை பாதுகாக்க வேண்டும். இந்தியா ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. பாஜக, ஆர்.எஸ்.எஸ். மட்டுமே நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என சிலர் நினைக்கிறார்கள்.  

அவர்கள் இந்தியர்களை முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. இந்திய மக்கள் ஒருநாளும் பாஜகவிற்கு அச்சப்படமாட்டார்கள்.

பாஜக மொழியின் மூலம் நாட்டில் பிளவை ஏற்படுத்தலாம் என நினைக்கிறது. தொலைக்காட்சியில் வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றி பேசமாட்டார்கள். ஆனால் அதில் பிரதமர் முகத்தை மட்டும் தான் ஒளிபரப்புவார்கள் என்று குறிப்பிட்டார்.

பாஜக ஏழைகளிடம் திருடுகிறது

பாஜக போன்று மக்கள் குரலை நசுக்கவில்லை. இந்திய மக்களின் குரலை நான் கேட்க விரும்புகிறேன்.  விரும்பும் மதத்தை, கடவுளைப் பின்பற்ற அனைவருக்கும் உரிமையுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை குறிப்பிட்ட தொழிலதிபர்கள் கட்டுக்குள் வைத்துள்ளனர். ஏழை மக்களிடமிருந்து பாஜக திருடுகிறது. 

நாட்டின் ஜனநாயக அமைப்புகள் தாக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளன. மதம், மொழி என நாட்டை பிளவுபடுத்தும் பணிகளை பாஜக, ஆர்.எஸ்.எஸ். மேற்கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com