
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி மற்றும் நகரம் வீரமாகாளி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா நாளை(செப்.8) நடைபெறுவதால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: வாட்ஸ்ஆப் மூலம் புலிக் குட்டி விற்பனை! வேலூரில் இளைஞர் கைது
அதற்கு பதிலாக 24.9.2022 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.