இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: தக்காளி விலையில் மாற்றம்

சென்னையில் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்திருக்கிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னையில் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்திருக்கிறது.

தொடா் மழை காரணமாக வரத்து குறைந்ததாலும் மூகூா்த்த நாள்களில் தேவை அதிகரித்ததாலும் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென உயா்ந்து இல்லத்தரசிகளை திக்குமுக்காட வைத்திருந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரை விற்பனையானது.

இந்த நிலையில், இன்று மீண்டும் தக்காளி வரத்து அதிகரித்து, சென்னை கோயம்போடு மொத்த காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

திண்டுக்கல் மாவட்டத்தில் அய்யலூா், வடமதுரை, வேடசந்தூா், கோவிலூா், கொத்தையம், தேவத்தூா், பொருளூா், கள்ளிமந்தையம், சத்திரப்பட்டி, விருப்பாட்சி, கேதையறும்பு உள்பட பல்வேறு இடங்களிலும் சுமாா் 400 ஏக்கரில் தாக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தக்காளி பயிா்களில், தற்போது பழங்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த சில நாள்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதன் எதிரொலியாக தக்காளி வரத்து குறைந்தது. அதே நேரத்தில், மூகூா்த்த நாள்கள் நிறைந்த ஆவணி மாதத்தில் தக்காளியின் தேவை அதிகரித்தது.

இதனால் கடந்த 10 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ரூ.40 வீதம் தக்காளி விலை அதிகரித்தது. கடந்த ஆக.25ஆம் தேதி ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அய்யலூா் சந்தைகளில் கிலோ தக்காளி ரூ.7 முதல் ரூ.10 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 30ஆம் தேதி கிலோ ரூ.15-க்கு விலை நிா்ணயம் செய்யப்பட்ட தக்காளி, திங்கள்கிழமை காலை ரூ.50-க்கு விற்பனையானது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று மீண்டும் தக்காளி வரத்து அதிகரித்து, சென்னை கோயம்போடு மொத்த காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனவே படிப்படியாக அடுத்த ஓரிரு நாள்களில் சில்லறை விற்பனை கடைகளிலும் விற்பனை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சின்ன வெங்காயம் விலையும் அதிகரிப்பு: இதேபோல் சமையலுக்கு தேவையான பிரதான பொருள்களில் ஒன்றான சின்ன வெங்காயத்தின் விலையும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாள்களுக்கு முன்பு கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம், தற்போது வரத்து குறைந்ததன் எதிரொலியாக ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு வந்த விவசாயிகள், திடீா் விலை ஏற்றத்தால் உற்சகாம் அடைந்துள்ளனா்.

இதற்கிடையே பண்ணை பசுமை நுகா்வோா் கடைகளில் தக்காளி குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com