முகச்சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி டானியாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்று அமைச்சா் சா.மு.நாசா் தெரிவித்துள்ளார்.
ஆவடி, வீராபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்டீபன்ராஜ்- பாக்யா. இவா்களது மகள் டானியா (9). முகச்சிதைவு நோயால் கடந்த 6 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தாா். சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசு உதவிட வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பெற்றோா் கோரிக்கை விடுத்தனா்.
இதையடுத்து, முதல்வரின் உத்தரவின்பேரில், கடந்த 17-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமையில், மருத்துவக் குழுவினா் டானியாவின் வீட்டுக்குச் சென்று இதுவரை வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தனா். பின்னா், சிறுமியை பூந்தமல்லி அருகே தண்டலத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இதையும் படிக்க- நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சி ?
அங்கு டானியாவுக்கு 10 போ் கொண்ட மருத்துவக் குழுவினா் சுமாா் 9 மணி நேர முக சீரமைப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனா். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமி இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது
அமைச்சர் நாசர், திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பூங்கொத்து அளித்து சிறுமியை வாழ்த்தினர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சா் சா.மு.நாசா், சிறுமி டானியாவின் படிப்பு செலவை அரசே ஏற்கும். சிறுமி குடும்பத்துக்கு இலவச வீடு வழங்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூ.15 லட்சம் செலவானது. அதை முழுவதுமாக அரசே ஏற்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


