கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: மத்திய அரசு முதல்கட்ட அனுமதி

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு முதல்கட்ட அனுமதி வழங்கியுள்ளது.
கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: மத்திய அரசு முதல்கட்ட அனுமதி

முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு முதல்கட்ட அனுமதி வழங்கியுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் இலக்கியப் பணிகளைப் போற்றும் வகையில் சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவே ரூ.80 கோடி செலவில் பேனா வடிவத்தில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், கடலுக்கு நடுவே அமையவுள்ள இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பாா்வையிட வசதியாக 650 மீட்டா் கண்ணாடிப் பாலம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது. 

நினைவுச் சின்னம் அமைக்க மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துவிட்ட நிலையில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அதன்படி, மெரினாவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு முதல் கட்ட அனுமதி அளித்துள்ளது.

திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சுழல் அனுமதி பெற்று அடுத்த கட்ட பணியைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com