அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுவது எப்படி? 

அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுவது எப்படி? 
அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுவது எப்படி? 


மதுரை: அங்கீகரிக்கப்படாத மனைகள் எவ்வாறு பத்திரப்பதிவு செய்யப்படுகின்றன? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

அங்கீகரிக்கப்படாத மனைகளை பத்திரப்பதிவு செய்யக் கூடாது என்று கூறியிருக்கும் நீதிபதிகள், அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படும் நிலை தொடர்ந்தால் அந்தந்த துறைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தேனி வீரபாண்டி பகுதியில் முறைகேடாக பத்திரப்பதிவு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பான முறைகேட்டில் ஈடுபட்ட சார் -பதிவாளரை உடனடியாக பணிநீக்கம் செய்து, அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுவது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com