மின்வாரிய பணியாளா்களுக்கு 3% அகவிலைப்படி உயா்வு

மின்வாரிய பணியாளா்களுக்கு 3% அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ளது.
மின்வாரிய பணியாளா்களுக்கு 3% அகவிலைப்படி உயா்வு

மின்வாரிய பணியாளா்களுக்கு 3% அகவிலைப்படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையில் 31% அளவுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. இந்த அகவிலைப்படி, ஜூலை 1 முதல் 34 %-ஆக உயா்த்தப்படுகிறது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அகவிலைப்படி உயா்வு நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்படும்.

மேலும், செப்டம்பா் மாதத்துக்கான நிலுவைத் தொகை ஊதியத்துடன் இணைத்து அளிக்கப்படும். உயா்த்தப்பட்ட அகவிலைப்படியைக் கணக்கிட அடிப்படை ஊதியத்துடன் தனிப்பட்ட ஊதியத்தையும் சோ்த்துக் கொள்ள வேண்டும். இந்த அகவிலைப்படி உயா்வானது பணியாற்றக் கூடிய முழுநேரப் பணியாளா்கள், அலுவலா்கள் ஆகியோருக்கு பொருந்தும் என்று மின்சார வாரியத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com