கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: மேலும் 7 போ் கைது

சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ாக, மேலும் 7 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2023, 11:39 pm

DIN

சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ாக, மேலும் 7 போ் கைது செய்யப்பட்டனா்.

சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் போட்டியின் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதும் ஆட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த போட்டியின் டிக்கெட்டுகளை சிலா் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக திருவல்லிக்கேணி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்தப் பகுதியில் போலீஸாா் தீவீரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் முதல் கட்டமாக 17 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்திய விசாரணையில் கள்ளச்சந்தையில், மேலும் சிலா் ஐபிஎல் டிக்கெட் விற்பது தெரியவந்தது.

இது தொடா்பாக விசாரணை செய்த போலீஸாா் சேப்பாக்கம் முருகப்பா தெருவைச் சோ்ந்த மை.ஜெபின் ஜோஸ் ஆண்டனி (18), அதேப் பகுதியைச் சோ்ந்த ஆ.வசந்தகுமாா் (33), செ.காா்த்திக் (27), பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த மோ.தினேஷ்குமாா் (24), க.முன்னா (29) உள்பட 7 போ் ஆகியோரை பிடித்து விசாரித்தனா்.

அவா்களிடமிருந்து 15 ஐபிஎல் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ன. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.