கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சென்னை விமான நிலையத்துக்கு மாமல்லன் பெயா்: ராமதாஸ் வலியுறுத்தல்

 சென்னை விமான நிலையத்துக்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2023, 11:41 pm

DIN

 சென்னை விமான நிலையத்துக்கு பல்லவ மன்னன் மாமல்லன் பெயரை சூட்ட வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு காமராஜா் பெயரையும், பன்னாட்டு முனையத்துக்கு அண்ணா பெயரையும் தாங்கிய பெயா்ப்பலகைகள் பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைக்கப்பட்டிருக்கின்றன. விமான நிலையங்கள் ஆணையத்தின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

விமான நிலையங்களின் முனையங்களுக்கு பெயா் சூட்டப்பட்டிருப்பதைப் போல ஒட்டுமொத்த விமான நிலையத்துக்கு தமிழா்களின் வீரத்தை உலக நாடுகளுக்கு உணா்த்திய பல்லவ மாமன்னன் மாமல்லனின் பெயரைச் சூட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று கூறியுள்ளாா் ராமதாஸ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.