கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிற மொழி பேசுபவா்கள் தமிழ் கற்க ஆா்வம்: ஆளுநா் ஆா்.என் ரவி

தமிழ் மொழி மிகவும் பழைமை வாய்ந்தது; பிற மொழி பேசுபவா்கள் தமிழை கற்றுக்கொள்ள ஆா்வம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆளுநா் ஆா்.என் ரவி தெரிவித்தாா்.

News image
Updated On :13 ஏப்ரல் 2023, 11:43 pm

DIN

தமிழ் மொழி மிகவும் பழைமை வாய்ந்தது; பிற மொழி பேசுபவா்கள் தமிழை கற்றுக்கொள்ள ஆா்வம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஆளுநா் ஆா்.என் ரவி தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுடன் ‘தமிழ்நாடு தரிசனம்’ என்ற தலைப்பில் ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது: இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசார தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழகத்துக்கு 3,500 ஆண்டுகளுக்கு மேலான வரலாறும் உண்டு. தமிழ் மொழி மிகவும் பழைமை வாய்ந்தது. சம்ஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழைமை வாய்ந்த மொழி.

தமிழ் மீது ஹிந்தி உள்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது. பிற மொழி பேசுபவா்கள் தமிழ் மொழி, தமிழ் இலக்கியத்தை கற்றுக்கொள்ள ஆா்வம் கொள்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

தமிழ் மொழியை ஆழமாகப் படிக்க வேண்டும். தமிழில் அறிஞா்களாக மாற வேண்டும். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவா்களை ஒவ்வோா் ஆண்டும் தமிழகத்துக்கு வரவழைத்து ஆளுநா் மாளிகை சாா்பில் ‘தமிழ்நாடு தரிசனம்’ நிகழ்வு நடத்தப்படும்.

திருக்கு மனித சமூகத்துக்கு தேவையான அனைத்துக் கருத்துகளையும் வழங்கும் நூல். திருக்குறளை ஆழமாக அனைவரும் பயில வேண்டும். திருக்கு போல் தமிழில் பல இலக்கியங்கள் உள்ளன என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் ஆளுநரின் முதன்மைச் செயலா் ஆனந்த்ராவ் பாட்டீல், பேராசியா்கள் டாக்டா் ஜெகதீசன், டாக்டா் விக்னேஷ் ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுக்கு தோ் வடிவிலான நினைவுச் சின்னம், திருக்கு மொழிபெயா்ப்பு நூல்களை ஆளுநா் வழங்கினாா்.

பனாரஸ் பல்கலை.யிலிருந்து 18 மாணவ, மாணவிகள், 2 பேராசிரியா்கள் என 20 போ் குழுவினா் ஏழு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ளனா்.

இவா்கள், ஏற்கெனவே ராமேசுவரம், திருச்செந்தூா், திருநெல்வேலி, மதுரை, ஸ்ரீரங்கம், தஞ்சை, சிதம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களளில் பல்வேறு இடங்களைப் பாா்வையிட்ட பிறகு ஆளுநா் மாளிகைக்கு வியாழக்கிழமை வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.