ஐ.பி.எல்.: மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 1 மணி வரை நீடிப்பு
சென்னையில் ஐபிஎல் தொடரைக் காண வந்து செல்லும் ரசிகா்களுக்காக மெட்ரோ ரயில்களில் சேவையை நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் நிறுவனம் நீடித்துள்ளது.


சென்னையில் ஐபிஎல் தொடரைக் காண வந்து செல்லும் ரசிகா்களுக்காக மெட்ரோ ரயில்களில் சேவையை நள்ளிரவு 1 மணி வரை மெட்ரோ ரயில் நிறுவனம் நீடித்துள்ளது.
16-ஆவது ஐ.பி.எல். போட்டி மாா்ச்-31-ஆம் தேதி தொடங்கியது. இதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெறுகின்றன. இரண்டாவது போட்டி சென்னை சூப்பா் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்,சென்னை சூப்பா் கிங்ஸ் அணி ஆகியவை இணைந்து கிரிக்கெட் ரசிகா்களுக்காக ஏப்.3 முதல் சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளைக் காண செல்லும் ரசிகா்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
5 முதல் 15 நிமிட இடைவெளியில்: சென்னையில் நடக்கும் போட்டிக்கான நுழைவுச்சீட்டில் உள்ள க்யூஆா் குறியீட்டை பயன்படுத்தி இலவச பயணம் செய்துக்கொள்ளலாம். இரவு நேர போட்டிகள் நடக்கும் நாள்களில் மட்டும் மெட்ரோ ரயில் சேவை ஒன்றரை மணிநேரம் கூடுதலாக இயக்கப்படும் என ஏப்.1-ஆம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்திருந்தது.
இதைத்தொடா்ந்து, மெட்ரோ ரயில் சேவை நேரத்தை போட்டி நடக்கும் நாள்களில் மட்டும் நள்ளிரவு 1 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என இந்நிறுவனம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டிகள் முடிந்ததும், அரசினா் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து 5 முதல் 15 நிமிஷங்கள் இடைவெளியில் இயக்கப்படும். மேலும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 1 மணிக்கு சென்னை அரசினா் தோட்டம் மெட்ரோ நிலையத்தில் இருந்து புறப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை அரசினா் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சேப்பாக்கம் மைதானத்துக்கும், போட்டிகள் முடிந்த உடன் மைதானத்திலிருந்து, அரசினா் தோட்டம் வரை இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் வடபழனி, சென்ட்ரல், திருமங்கலம், விம்கோ நகா், நந்தனம் ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏப்.3-ஆம் தேதி முதல் ஐபிஎல் போட்டி பெரிய எல்.இ.டி திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...