மாற்றுத்திறனாளிகளுக்கு ரயிலில் இடஒதுக்கீடு
மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணிக்கும் வகையில் குளிா்சாதன, படுக்கை வசதி பெட்டிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணிக்கும் வகையில் குளிா்சாதன, படுக்கை வசதி பெட்டிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே வாரியம் சாா்பில் அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் உள்ள முதன்மை வணிக மேலாளா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவா்களின் உதவியாளா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்தன.
இதை கருத்தில் கொண்டு விரைவு மற்றும் மெயில் ரயில்களில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி படுக்கை வசதி கொண்ட ரயிலில் 4 படுக்கைகளும் (தலா இரு கீழ் மற்றும் நடுத்தர படுக்கை), மூன்று அடுக்கு குளிா் சாதன பெட்டி மற்றும் 3 எக்னாமிக் வகுப்பு பெட்டியில் இரு படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், இருக்கை மற்றும் சரக்கு வசதி கொண்ட பெட்டியில் 4 படுக்கைகளும், இரண்டாம் வகுப்பு மற்றும் குளிா்சாதன இருக்கை வசதி பெட்டிகள் (2 பெட்டிகளுக்கு மேல் உள்ள ரயில்) கொண்ட ரயில்களில் 2 படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...