ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தங்கம் விலை அதிரடியாகக் குறைந்தது!

சென்னையில் இன்று(சனிக்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 45,200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

News image
Updated On :15 ஏப்ரல் 2023, 4:39 am

DIN

சென்னையில் இன்று(சனிக்கிழமை) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 45,200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த ஏப்ரலில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஏப்.5-ஆம் தேதி வரலாறு காணாத அளவில் அதிகரித்து புதிய உச்சமாக ரூ.45,520-க்கு விற்கப்பட்டது. அதைத்தொடா்ந்து தங்கத்தின் விலை குறைந்தது.

இந்நிலையில் நேற்று தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 45,200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து ரூ. 5,650-க்கு விற்பனை ஆகிறது. 

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ. 81.50-க்கும் கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 81,500 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.