
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டமாக மண் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.
திருப்பரங்குன்றம் - ஒத்தகடை வரை 76 இடங்களில் சாலை ஓரத்தில் 30 அடி ஆழத்தில் மண் எடுக்கும் பணி நடந்து வருகிறது. திருப்பரங்குன்றம் - ஒத்தகடை வரை 31 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் ஒன்றான மதுரை மாநகரில் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
திருமங்கலத்தில் இருந்து தோப்பூர், திருநகர், மதுர காலேஜ், காளவாசல், சிம்மக்கல், கோரிப்பாளையம், கே.புதூர், மாட்டுத்தாவணி, ஐகோர்ட் வழியாக ஒத்தக்கடை வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த ஆய்வு செய்யப்பட்டு தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.