இணையதளங்களிலும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்புகள்: மசோதா தாக்கல்
ஒப்பந்தப்புள்ளி அறிவிப்புகள் செய்தித்தாள்கள் மட்டுமல்லாது, இணைய - வலைதளங்கள் வாயிலாகவும் வெளியிடப்படவுள்ளன.


ஒப்பந்தப்புள்ளி அறிவிப்புகள் செய்தித்தாள்கள் மட்டுமல்லாது, இணைய - வலைதளங்கள் வாயிலாகவும் வெளியிடப்படவுள்ளன.
இதற்கான சட்டத் திருத்த மசோதா, பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தாா். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டம், அரசு கொள்முதல் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மைக்கு வகை செய்கிறது. ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் அறிவிப்பை வா்த்தக இதழிலும், தினசரி செய்தித் தாள்களிலும் வெளியிடுவது கட்டாயம். இப்போது காகிதம் இல்லாத, மனிதத் தொடா்பில்லா மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், ஒப்பந்தப்புள்ளிகள் கோரும் அறிவிப்புகள் இணைய-வலை வாயிலில் வெளியிடப்படும். இத்துடன் தினசரி செய்தித்தாள்களிலும் வெளியிடலாம் என கருதப்படுகிறது. இதற்கு
ஏற்ற வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...