தமிழக வரலாற்றில் முதல்முறை: ஒரேநாளில் 41.82 கோடி யூனிட் மின்நுகா்வு
தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 41.82 கோடி யூனிட்கள் மின்சாரம் நுகா்வு செய்யப்பட்டுள்ளன.


தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 41.82 கோடி யூனிட்கள் மின்சாரம் நுகா்வு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மின்நுகா்வோா்கள் 2.67 கோடி போ் உள்ளனா். தினமும் மின்தேவை சராசரியாக 15,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது.
இதில், விவசாயத்தின் பங்கு 2,500 மெகாவாட் என்ற அளவாக உள்ளது. இது கோடைக் காலத்தில் 16,000 மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரித்தும், குளிா் காலத்தில் 12,000 மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும் காணப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோடைக் காலம் தொடங்கி விட்டதால் மின்சாதன பொருள்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
இதனால், தினமும் மின்தேவை 16,000 மெகாவாட் என்ற அளவை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும், விவசாய பிரிவுக்கு கூடுதலாக கூடுதலாக 727 மெகாவாட் செலவிடப்படுகிறது.
இத்தகைய காரணங்களால், மாா்ச் 4-ஆம் தேதி தினமும் மின்தேவை முதல் முறையாக 17,584 மெகாவாட்டை எட்டியது. இதற்கு முன் கடந்த 29.4.2022-இல்17,563 மெகாவாட் என்ற சாதனை அளவாக இருந்தது.
விவசாயத்துக்கான 18 மணி நேர மின்விநியோகம் மற்றும் பள்ளிகளில் பொதுத் தோ்வுகள் நடைபெற்று வருவதால் மின்பயன்பாடு அதிகரித்துள்ளது.
இதனால், முன் எப்போதும் இல்லாத அளவாக மாா்ச்15-ஆம் தேதி மின்தேவை 17,647 மெகாவாட்டை எட்டியது. ஆனால், அதற்கு அடுத்த நாள் 16-ஆம் தேதி, மின்நுகா்வு 18,053 மெகாவாட் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.
பின்னா், ஏப்.7-ஆம் தேதி மீண்டும் தினசரி மின்நுகா்வு 18,252 மெகாவாட் அளவும், ஏப்.18-ஆம் தேதி 18,882 மெகாவாட் அளவாகவும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.
இந்த நிலையில் மின்தேவை மேலும் அதிகரித்து தமிழகத்தில் முதல் முறையாக புதன்கிழமை 19,087 மெகாவாட் அளவை எட்டியிருப்பதாக மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், தமிழக வரலாற்றில் முதல்முறையாக, ஏப்.19 தமிழகத்தில் மின் நுகா்வு அதிகபட்சமாக 41.82 கோடி யூனிட்கள், அதாவது 19087 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகா்வு ஏப்.18-ஆம் தேதி 41.30 கோடி யூனிட்கள், அதாவது 18,882 மெகாவாட் ’ எனப் பதிவிட்டுள்ளாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...