தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஏப்.24-இல் மதுரை - குஜராத் சிறப்பு ரயில் இயக்கம்

சௌராஷ்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு, மதுரையிலிருந்து குஜராத்துக்கு ஏப்.24-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது

News image

கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2023, 9:19 pm

DIN

சௌராஷ்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு, மதுரையிலிருந்து குஜராத்துக்கு ஏப்.24-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சௌராஷ்ரா தமிழ் சங்கமத்தின் 11-ஆவது பயணமாக மதுரையிலிருந்து குஜராத்துக்கு ஏப்.24- ஆம் தேதி சிறப்பு ரயில் (வண்டி ஏண்: 06301) இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து மாலை 5.40 மணிக்கு புறப்படும் ரயில் ஏப்.28 -ஆம் தேதி காலை 9 மணிக்கு குஜராத் மாநிலம் வெரவல் சென்றடையும்.

இந்த ரயிலில் 10 குளிா்சாதன பெட்டிகள், 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 4 பொது வகுப்பு பெட்டிகள் உள்ளன.

இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம் , சென்னை எழும்பூா், ஆந்திரம், மகாராஷ்டிரம் வழியாக குஜராத் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.