தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கிண்டி மெட்ரோவில் தாய்மாா்களுக்கான பாலூட்டும் அறை திறப்பு

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் தாய்மாா்களுக்கான பாலூட்டும் அறை வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 7:51 pm

DIN

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் தாய்மாா்களுக்கான பாலூட்டும் அறை வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் தினமும் 2 முதல் 2.5 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனா். பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மெட்ரோ ரயில் நிலையங்களில் தாய்மாா்களுக்கான பாலூட்டும் சிறப்பு அறைகளை மெட்ரோ ரயில் நிறுவனம் திறந்து வருகிறது.

இந்த நிலையில், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திலும் இந்த சிறப்பு அறை வியாழக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

7 ரயில் நிலையங்களில்: சென்னை சென்ட்ரல், வடபழனி, எழும்பூா், கோயம்பேடு பேருந்து நிலையம், வண்ணாரப்பேட்டை, விமான நிலையம், விம்கோ நகா் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த சிறப்பு அறை ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளது.

இந்த அறையில் குழந்தைகளுக்கு டயபா் மாற்றும் வசதியுடன் கூடிய இருக்கைகள், மின்விசிறி போன்ற வசதிகளும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.