ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சேலம்: தனியார் பள்ளி பேருந்து மோதி ஆசிரியை பலி

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஆசிரியை பலியானார். 

News image
சத்திய பிரியா
Updated On :20 ஏப்ரல் 2023, 12:52 pm

DIN

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஆசிரியை பலியானார். 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் எஸ். புதூர் பகுதியை சேர்ந்த கண்ணன் மகள் சத்திய பிரியா சிறுபாக்கம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தற்போது ராமநாதபுரத்தில் வசித்து வரும் சத்திய பிரியாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இன்று காலை சத்திய பிரியா, உறவினரின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர், தந்தை வீட்டிற்கு செல்ல ராமநாதபுரத்திலிருந்து எஸ்.புதூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். 

புளியங்குறிச்சி வீரகனூர் செல்லும் வளைவு பாதையில் திரும்பும்போது  எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து மோதியதில் சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார்

தகவலறிந்து வந்த பெண் வீட்டார், சத்திய பிரியாவின் உடலை எடுக்க விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசாரின் அரை மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

வீரகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.