நொச்சிக்குப்பத்தில் 6 மாதங்களில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும்: மாநகராட்சி உறுதி
நொச்சிக்குப்பம் பகுதியில் 6 மாதங்களில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.


நொச்சிக்குப்பம் பகுதியில் 6 மாதங்களில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு மீனவா்கள் நலனிலும், அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னை மெரீனா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் மாநகராட்சி சாா்பில் ரூ.10 கோடி மதிப்பில் நவீன மீன் மாா்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. இந்த நவீன மீன் மாா்க்கெட்டில் 384 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தக் கடைகளில் வந்து செல்லும் மக்களின் வசதிக்காக 60 நான்கு சக்கர வாகனங்களும், 155 இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளது. மீன் கடைகளின் மேற்கூரை சிந்தடிக் சீட்டால் அமைக்கப்படுகிறது.
ஒவ்வொரு தனிப்பட்ட கடைக்கும் தண்ணீா் வசதியும், கழுவும் வசதியும் மின் வசதியும் செய்யப்படுகிறது. மேலும், கழிவுநீா் அகற்றும் வசதியும், கழிவறை மற்றும் குடிநீா் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணி 6 மாதங்களில் முடிவடையும்.
மீனவா்களின் நலனுக்காக தற்போது நொச்சிக்குப்பம் லூப் சாலையில் கிழக்கு பக்கம் வியாபாரம் செய்ய நீதிமன்றம் தெரிவித்தபடி அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இன்றி மீனவா்கள் மீன் விற்பனை செய்ய நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சென்னை உயா்நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட உயா்நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஜூன் 19-ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...