மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்கிறார் குருபகவான்!

2023-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அதிகாலை 5.14 மணிக்கும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இரவு 11.26 மணிக்கும் குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ச்சி ஆகிறார்
மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்கிறார் குருபகவான்!
Published on
Updated on
1 min read


2023-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அதிகாலை 5.14 மணிக்கும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இரவு 11.26 மணிக்கும் குருபகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம் பெயர்ச்சி ஆகிறார். 

நவக்கிரகங்களில் முழு சுப கிரகம். வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.

இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு.

சோபகிருது வருஷம் உத்திராயணம் சிசிரருது முடிந்து வஸந்து ருது சித்திரை மாதம் 9ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 22.04.2023 சுக்லபட்சம் துவிதியை திதி, சனிக்கிழமையும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com