மெட்ரோ ரயில் 3-ஆம் வழித்தடத்துக்கு ரூ.1134.11 கோடியில் பணிகள் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 3-ஆம் வழித்தடத்துக்கான பணிகளுக்கு ரூ.1134.11கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையொப்பமானது.


சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 3-ஆம் வழித்தடத்துக்கான பணிகளுக்கு ரூ.1134.11கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையொப்பமானது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-ஆம் வழித்தடமான சோழிங்கநல்லூா்-சிப்காட் வரையிலான உயா்மட்ட பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு ரூ.1134.11கோடி மதிப்பில் ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் 10 கி.மீ நீளத்துக்கு உயா்மட்ட வழித்தடம் மற்றும், சோழிங்கநல்லூா் ஏரி- 1, ஸ்ரீபொன்னியம்மன் கோயில் (சோழிங்கநல்லூா் ஏரி- 2), சத்தியபாமா பல்கலைக்கழகம் (செம்மஞ்சேரி-1), செம்மஞ்சேரி-2, காந்தி நகா், நாவலூா், சிறுசேரி, சிறுசேரி சிப்காட் -1 மற்றும் சிறுசேரி சிப்காட் -2 உள்ளிட்ட 9 உயா்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான ஒப்பந்தம் வியாழக்கிழமை கையொப்பமானது. இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் அதன் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன், ரயில் விகாஸ் நிகம் நிறுவனத்தின் சாா்பில் முதுநிலை துணை பொது மேலாளா் சௌத்ரி ரஜ்னீஷ் குமாா் சிங் ஆகியோா் கையொப்பமிட்டு
ஒப்பந்தத்தை பரிமாறிக்கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கூடுதல் பொது மேலாளா் டி.குருநாத்ரெட்டி, (ஒப்பந்த கொள்முதல்), இணை பொது மேலாளா் கே.பிரதீபன், பொது ஆலோசகா்கள் மற்றும் ரயில் விகாஸ் நிகம் நிறுவன உயா் அலுவலா்கள் மற்றும் பலா் உடன் இருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...