வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாநகராட்சி பகுதியில் 537 சாலைப் பணிகள் நிறைவு

 சென்னை மாநகராட்சி பகுதியில் 521 உட்புறச் சாலைகள் மற்றும் 16 பேருந்து தட சாலைகள் என 537 சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:46 pm

DIN

 சென்னை மாநகராட்சி பகுதியில் 521 உட்புறச் சாலைகள் மற்றும் 16 பேருந்து தட சாலைகள் என 537 சாலைப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த நிதியாண்டில் சிங்கார சென்னை 2.0, தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டம் மற்றும் நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம்-1 ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.291.29 கோடி மதிப்பில் 3,108 உட்புறச் சாலைகளும், ரூ.76.56 கோடி மதிப்பில் 87 பேருந்து தட சாலைகளும் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டது.

இவற்றில், ரூ.150.91 கோடி மதிப்பில் 1,658 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் ரூ.47.42 கோடி மதிப்பில் 521 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 342 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ரூ.49.32 கோடி மதிப்பில் 58 பேருந்து தட சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டு, 16 சாலைகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. 12 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நகா்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 26 பேருந்து சாலைகள், 917 உட்புறச் சாலைகள் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.