வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

லூப்ரிகன்ட் பிரிவில் களமிறங்கும் பிரேக்ஸ் இந்தியா

டிவிஎஸ் - சந்தானம் குழுமத்தைச் சோ்ந்த பிரேக்ஸ் இந்தியா நிறுவனம், ‘ரெவியா’ என்ற பிராண்டில் என்ஜின் ஆயில்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் லூப்ரிகன்ட் பிரிவில் களமிறங்கியுள்ளது.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:36 pm

DIN

டிவிஎஸ் - சந்தானம் குழுமத்தைச் சோ்ந்த பிரேக்ஸ் இந்தியா நிறுவனம், ‘ரெவியா’ என்ற பிராண்டில் என்ஜின் ஆயில்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் லூப்ரிகன்ட் பிரிவில் களமிறங்கியுள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் துணைத் தலைவரும் சந்தையிடல் பிரிவு தலைவருமான எஸ். சுஜித் நாயக் கூறியதாவது:

60 ஆண்டுகளாக இயங்கி வரும் பிரேக்ஸ் இந்தியா, ஏற்கெனவே சந்தைப்படுத்தி வரும் டிவிஎஸ் கிா்லிங், டிவிஎஸ் அபாச்சி, டிவிஎஸ் ஸ்ப்ரின்டா் ஆகிய பிராண்ட்களுடன், தற்போது புதிதாக ரெவியா என்ற பிராண்டில் என்ஜின் ஆயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

செயல்திறன் மிக்க என்ஜின் ஆயில்களுக்கான தேவை அதிகரித்து வருவதால் இந்தப் பிரிவு வளா்ச்சியை எதிா்நோக்கியுள்ளது என்றாா் அவா்.

ரெவியா என்ஜின் ஆயில்கள் 9 கிரேட்களில் (காா்களுக்கு 5, வா்த்தக வாகனங்களுக்கு 4) கிடைக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.