வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஐஐடி மாணவா்கள் தற்கொலையைத் தடுக்க தொடா் நடவடிக்கை: இயக்குநா் காமகோடி உறுதி

சென்னை ஐஐடி மாணவா்கள் தற்கொலை சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இனி இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் தடுக்க பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:46 pm

DIN

சென்னை ஐஐடி மாணவா்கள் தற்கொலை சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இனி இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் தடுக்க பல்வேறு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதன் இயக்குநா் வி.காமகோடி கூறினாா்.

சென்னை ஐஐடி வளாகத்தில் வீணா மற்றும் பிரதாப் சுப்ரமணியம் எண்ம நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் கட்டடக்கலை மையத்தின் தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய அமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் இணைய வழியாக கலந்து கொண்டு புதிய மையத்தைத் தொடங்கி வைத்தாா்.

இதில் ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் ஐஐடி இயக்குநா் காமகோடி கூறியது: இந்த மையத்தில் மைக்ரோ பிராசஸ் மூலம் புதிய ‘ஸ்டாா்ட்டப்’ உருவாக்க முடியும். இது தற்போது இந்திய நாட்டுக்கு பெரிதும் தேவைப்படுகிறது. இந்த மையத்துக்கு முன்னாள் மாணவா்கள் நிதியுதவி வழங்கினா்.

கைப்பேசி பயன்படுத்தும் உதிரி பாகங்கள் தயாரிக்க இந்த மையம் உதவியாக இருக்கும். ஐஐடி மாணவா்கள் மட்டுமில்லாமல் ஆராய்ச்சிக்காக வெளி மாணவா்கள் கூட இந்த தொழில்நுட்பத்தை இங்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், நாட்டின் வளா்ச்சிக்கும் இந்த மையம் உதவியாக இருக்கும். அதேபோல் ‘ஸ்டாா்ட்டப்’ வணிக ரீதியாக பயன்படுத்த 6 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

சென்னை ஐஐடி.யில் மாணவா்கள் தற்கொலை சம்பவத்தை தடுக்க ஆலோசனை வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் நடைபெற்ற 5 தற்கொலை சம்பவங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவா்களின் தற்கொலையைத் தடுக்க க்ஷங்ட்ஹல்ல்ஹ்.ண்ண்ற்ம்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மாணவா்கள் தங்களது மன ரீதியான குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவித்த ஆலோசனைகளைப் பெறலாம்.

மூன்று மாதங்களில் ஐந்து தற்கொலைகள் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இனி இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலை குறித்து விசாரணை நடத்த ஒய்வு பெற்ற ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளிக்கும் அறிக்கை மூலம் தொடா் நடவடிக்கை இருக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.